ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்! பெட்டிகளில் புதிய திட்டம் அறிமுகம்!
பேருந்து கட்டணம் உயர்ந்து வருவதன் காரணமாக நீண்ட தூரத்திற்கு பயணம் செய்ய எதுவாக கழிப்பறை வசதி இருக்கிற ரயில் பயணத்தை அனைவரும் விரும்புகின்றார்கள். அந்தவகையில் சில நாட்களாகவே ரயில் கட்டணம் அதிகரித்தபடியே தான் இருக்கிறது மற்றும் பயணிகள் ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் ஆக மாற்றப்பட்டு வருகின்றன.
மேலும் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகைகளையும் ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. இதனால் நீண்ட தூரம் ரயிலில் பயணிக்கும் பயணிகள் கூடுதல் கட்டணத்தால் அவதிக்கு உள்ளாகினார்கள்.
மேலும் தற்போது ரயில்களின் பெயரை மாற்றம் செய்து பயணிகளிடம் அதிக கட்டணம் வசுலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதனால் ஒன்றிய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் தொலைதூர ரயில்களும் முன்பதிவு வசதி கொண்ட இரண்டு ஸ்லீப்பர் பெட்கள் மட்டும் இணைக்கப்படும் எனவும் மீதமுள்ள பெட்கள் அனைத்தும் குளிர்சாதன பெட்டிகளாக மாற்ற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ரயிலின் வேகத்தை அதிகரிக்கவும் ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. அது மட்டும் அல்லாமல் முதற்கட்டமாக இந்த திட்டத்தை தென் மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன், முத்துநகர் ,பொதிகை, மலைக்கோட்டை, சோழன் மற்றும் கோவை மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் செயல்படுத்த உள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் சாதாரண ஸ்லீப்பர் பெட்டுக்ககளில் இடம் கிடைக்காத பயணிகள் குளிர்சாதன பெட்டிகளில் தான் பயணம் செய்ய வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சாதாரண ஸ்லீப்பரை விட குளிர்சாதன பெட்டிகளில் கட்டணம் அதிகம் ஆகவே ஒன்றிய அரசின் இந்த முடிவால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.