இங்கிலாந்துக்கு எதிரான சிறப்பான சம்பவம்… ஐசிசி தரவரிசையில் உச்சம் தொட்ட பூம்ரா!

0
185

இங்கிலாந்துக்கு எதிரான சிறப்பான சம்பவம்… ஐசிசி தரவரிசையில் உச்சம் தொட்ட பூம்ரா!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரீத் பூம்ரா ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை சமன் செய்த இந்தியா, டி 20 தொடரை வெற்றி பெற்றது. இப்போது ஒருநாள் போட்டி நடந்துவரும் நிலையில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றனது.

இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கிய ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. ஆரம்பமே அமர்க்களமாக முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தார் பூம்ரா. அதையடுத்து வந்த ஓவர்களில் அடுத்தடுத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை இழந்து வெளியேறினார். இதனால் 25 ஓவர்களுக்குள்ளாக 110 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தனர். இந்திய அணியின் பூம்ரா 19 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இந்த இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர்.

இந்த அற்புதமான பந்துவீச்சால் பூம்ரா இப்போது ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் ட்ரண்ட் போல்ட்டும், மூன்றாம் இடத்தில் ஷாகீன் அப்ரிடியும் உள்ளனர். அதே போல டி 20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் 5 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Previous articleஅவ்வளவு பெரிய நாட்டிற்கே பட்ஜெட் தேவைப்படும்போது வீட்டிற்கு தேவை படாதா?
Next articleஇலங்கை அதிபர் நாட்டை விட்டு தப்பிச்செல்ல இந்தியா உதவி புரிந்ததா? தூதரகம் அளித்த விளக்கம்!