இலங்கை அதிபர் நாட்டை விட்டு தப்பிச்செல்ல இந்தியா உதவி புரிந்ததா? தூதரகம் அளித்த விளக்கம்!

0
60

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியின் காரணமாக, பொதுமக்கள் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றன. அன்றாட தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டுமளவிற்கு அதிகரித்திருப்பதால் அந்த நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று இருக்கிறது.

அதோடு போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டதால் அதிபர் மாளிகையிலிருந்து அந்த நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடினார்.

இந்த நிலையில், அந்த நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்று கொண்ட ரனில் விக்ரமசிங்கே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய அரசை அமைக்கும் வரையில் காபந்து பிரதமராக தொடர்வதாக கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து அதிபர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோத்தபய ராஜபக்சேவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆகவே அவர் நேற்றைய தினம் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், உள்நாட்டில் உண்டான மக்கள் போராட்டத்திற்கு பயந்து இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ஷை நாட்டை விட்டு தப்பினார். அவர் மாலத்தீவுக்கு குடும்பத்துடன் சென்று விட்டதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

ஆகவே மாலத்தீவிலிருந்து கோத்தபயவை வெளியேற்ற வேண்டும் என அந்த நாட்டு அதிபர் அலுவலகம் முன்பு மக்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு நடுவே கோத்தபைய இலங்கையிலிருந்து தப்பி செல்ல இந்திய அரசுதான் உதவியதாக தகவல் பரவியது. இந்தியா உதவியதாக சில ஊடகங்கள் மூலமாக தகவல் வெளியிடப்பட்டனர்.

ஆனாலும் இந்த தகவலை இந்திய அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது, இது தொடர்பாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தன்னுடைய வலைதளப் பதிவின் மூலமாக அளித்த விளக்கத்தில் இலங்கையிலிருந்து கோத்தபய ராஜபக்சே வெளியேறி பயணம் செய்ய இந்தியா உதவியதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.

இதனை இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுக்கிறது, இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு யூகத்தின் அடிப்படையில் இது போன்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன என தெரிவித்திருக்கிறது.

அத்துடன் இலங்கை நாட்டில் ஜனநாயக வழிமுறைகள் மதிப்பீடுகள் ஜனநாயக அமைப்புகள் அரசியல் சாசன கட்டமைப்புகள் மூலமாக செழிப்பான முன்னேற்றத்துக்கான எதிர்பார்ப்புகளை நினைவாக்குவதற்கு அந்த நாட்டு மக்கள் முயற்சி செய்கிறார்கள். இதற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.