அவ்வளவு பெரிய நாட்டிற்கே பட்ஜெட் தேவைப்படும்போது வீட்டிற்கு தேவை படாதா?

0
67

நாட்டின் செலவுகளை கவனிப்பதற்காக வருடம் தோறும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அவ்வளவு பெரிய நாட்டை ஆள்வதற்கு நிதிநிலை தேவைப்படும் பொழுது நம்முடைய வீட்டுக்கு அது எவ்வளவு முக்கியம்?

நம்முடைய நாட்டில் மாத சம்பளம் பெற்று அதில் குடும்பம் நடத்தும் நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை நான் அதிகம். அப்படி மாத சம்பளத்தில் வாழ்பவர்களுக்கு பட்ஜெட்டின் முக்கியத்துவம் நன்றாக தெரியும். எளிமையாக வீட்டு பட்ஜெட் போடும் வழியை செல்கிறோம் மாதத்தின் முதல் நாள் அமர்ந்து ஒரு நோட்டு பேனாவை வைத்து ஆரம்பியுங்கள்.

முதலில் அந்த வீட்டில் யாரெல்லாம் வேலை செய்கிறார்களோ அவர்களுடைய வருமான நிலையை கருத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு மாத சம்பளம் இருக்கும் ஒரு சிலர் வேலைக்கு செல்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கு வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்கும், அப்படி யார் யாருக்கு எவ்வளவு பணம் வருகிறது என்பதை முதலில் கணக்கீடு செய்து கொள்ளுங்கள்.

அத்தியாவசிய செலவு

வீட்டில் வாங்கும் பால், மளிகை, மருந்துகள், தண்ணீர், காய்கறி செலவுகளை குறைக்க இயலாது. சென்ற மாதம் இவற்றில் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு ஆனது என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள். இந்த மாதம் வருமானத்திலிருந்து அதனை கழித்துக் கொள்ளுங்கள்.

இந்த மாத தேவைகள்

ஒரு சில மாதங்களில் கல்வி கட்டணம், மின்சார கட்டணம், வீட்டு வரி, பாலிசி சந்தா, வண்டி மாத தவணை, தொலைபேசி கட்டணம், என சில செலவுகள் வரும், அவற்றையும் பட்டியலிட்டுக் கொள்ளலாம். வருமான கணக்கில் அதனையும் கழித்துக் கொள்ளுங்கள், கடன் இருந்தால் அதற்கான மாத கட்டணம் எவ்வளவு என்பதை பார்த்து அதையும் கழித்து கொள்ளுங்கள்.

சேமிப்பு

வீட்டில் குழந்தைகள், வயதானவர்கள், உள்ளிட்டோர் இருந்தால் அவர்களுக்கு என தனியாக ஒரு தொகையைப் பிரித்து வைத்து சேமிப்பு கணக்கில் போட்டு விடுங்கள், திடீர் மருத்துவ செலவுகளுக்கு அது பயன்படும் விதமாக இருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கான மாத சந்தாக்களை கணக்கீடு செய்து அதையும் கழித்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு கணக்குகளை பிரித்து எழுதி கொண்டால் ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவாகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். செலவுகளை கழித்து விட்டால் கையில் எவ்வளவு இருக்கும் என்பதையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

வரவு எட்டணா, செலவு பத்தணா, என்றாகாமல் செலவு ஆறனா என்று குறைக்க இந்த பட்டியல் தான் உதவி புரியும். இப்படி பட்டியலிடும்போது தேவையில்லாத செலவுகளை கண்டறிந்து அதனை தவிர்த்து விடலாம்.

அது போகவே மிச்சம் இருக்கும் பணம்தான் சேமிப்பிற்கானது, இதில் இடையில் உறவினர்கள் வருவது. படத்திற்கு செல்வது, போன்ற நிகழும் போது இந்த தொகையிலிருந்து தான் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இவை அனைத்தையும் மாதத்தின் முதலிலேயே கணக்கீடு செய்தால் தான் அந்த மாதத்தில் எவ்வாறு செலவாகும். மாத இறுதி வரியில் பணத்தை எப்படி இட்டுச் செல்வது என்று தெளிவாகும்.

ஒரு சில மாதங்களில் சேமிப்பு போக கையில் பணமிருக்கும் அதுபோன்ற சமயங்களில் கையிலிருக்கின்ற பணத்தைக் கொண்டு கடனின் அசலை கட்ட முயற்சி செய்யுங்கள், அந்த சமயத்தில் வட்டியின் அளவும் குறையும், கடன் கட்டும் காலமும், குறையும்.

இதற்கு தற்பொழுது பல செயலிகள் சந்தையில் இருக்கின்றன. மணி பை, டே டு டே, எக்ஸ்பென்ஸ், மை பெட்ஜெட், வாலட், ஃபேமிலி பட்ஜெட், உள்ளிட்ட சேலைகள் இதற்கு உதவி புரியும் பிரிவுகளாக பிரித்து பணத்தை உள்ளிட்டால் மிச்சமிருக்கும் பணத்தை பட்ஜெட் போட உதவி புரியும்.