காங்கிரஸ் தலைவரை அழைக்காமல் மோடியை அழைப்பது ஏன்?பின்னணி திட்டம் என்ன!?
புதுடெல்லியில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை அடுத்த மாமல்லபுரத்திலுள்ள பூஞ்சேரி கிராமத்தில் வருகின்ற 28 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் முதன் முறையாக வெளியாகும் வரலாற்று சிறப்புமிக்க இந்த செஸ் திருவிழா 187 நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றார்கள். மேலும் அவர்களின் வருகையை ஒட்டி அவர்களுக்காக தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் வருகிறது.
அதுமட்டுமின்றி அவர்களுக்கு சாப்பாடு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்யப்பட்டு வருகின்றது.இதைத்தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை மிகச் சிறப்பாக நடத்துவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அரசு துறைச் செயலாளர்கள் ,உயர் அதிகாரிகள் என அனைவரும் கலந்து கொண்டு போட்டிகளை நடத்தயிருக்கின்றார்கள்.
பூஞ்சேரியின் போர்பாயிண்ட் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் 52 ஆயிரம் சதுர அடி பரப்பில் செஸ் விளையாட்டு வீரர்களுக்கான நவீன உள்விளையாட்டு அரங்கம் பெரியதாக அமைக்கப்பட்ட வருகிறது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள 22 சதுர அடி அளவிலான அரங்கத்தை விளையாட்டு அரங்கமாக மேம்படுத்துவதன் பணிகளையும் தொடர்ந்து செய்து கொண்டு வருகின்றனர்.
அதன்படி செஸ் ஒலிம்பியாட்டின் பிரம்மாண்டமான தொடக்க விழாவாக சென்னை நேரு மைதானத்தில் வருகின்ற 28ஆம் தேதி மாலை ஐந்து முப்பது மணிக்கு நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதம நரேந்திர மோடி தொடங்கி வைக்கின்றார். அமைச்சர் ஸ்டாலின் அவர்களும் தலைமை தாங்குவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் அவர்கள் அடுத்த வாரம் டெல்லிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவங்கி வைக்க பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க மு க ஸ்டாலின் அவர்கள் டெல்லிக்கு செல்கிறார்.