இந்த நாடுகளுக்கு உதவி செய்ய நாங்க ரெடி!! இந்திய அரசு அசத்தல்!!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஏற்பட்ட போர் காரணமாக சர்வதேச அளவில் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் ரஷ்யா கோதுமையை நம்பியிருக்கும் உலக நாடுகள் பலதும் கடுமையான உணவு தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றது.
கடந்த மார்ச் மாதத்தில் திடீரென்று ஏற்பட்ட வெப்பநிலை காரணமாக நடப்பு ஆண்டில் மொத்த கோதுமை உற்பத்தி 10.6 கோடி டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்ற போர் காரணமாக சர்வதேச அளவில் பணவீக்கமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்தியாவின் பண வீக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த சூழலில் உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதன் நோக்கத்திலும் மற்றும் கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதிப்பாக மத்திய அரசு இது குறித்து விளக்கம் அளித்தது.இந்நிலையில் சர்வதேச நாடுகளான வங்கதேசம்,ஓமன், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் உள்ள கோரிக்கையை ஏற்று இந்தியா கோதுமை ஏற்றுமதி யை அனுமதித்துள்ளது.
எனவே உணவுத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அறிவிக்கையில் இந்தியா கோதுமை ஏற்றுமையில் பங்கு வகிக்கும் நாடு இல்லை என்றாலும் உணவு சங்கிலியில் தவிக்கும் நட்பு நாடுகளுக்கு பெரும் உதவியாக கோதுமையை ஏற்றுமதி செய்வோம் என்றார்.
இதைத்தொடர்ந்து இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி தடை உத்தரவுக்கு ஜி 7 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பழைய தீர்ப்புகளும் மீறி ஏற்றுமதியை சீர்படுத்தி உள்ளோம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் உணவு பஞ்சத்தால் தவிக்கும் 12க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 1.8 மில்லியன் டன் கோதுமை ஏற்றுமதி செய்திருக்கின்றோம்.
இதன்படி வங்காளதேசத்திற்கு ஜீரோ புள்ளி ஒரு மில்லியன் டன் கோதுமை ஏற்றுமதி செய்துள்ளது. அதேபோல் இந்தோனேசியாவுக்கும் 0.1 மில்லியன் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் நாடுகளுக்கு இந்தியா தனது கோரிக்கையை பரிசளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம்,பஞ்சாப்,அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கோதுமை அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.இதனால் கோதுமை உற்பத்தி பெருகும் என தெரியவருகிறது.