தமிழகத்தில் ஊரடங்கு போடப்படும் நிலையா? அதிகரிக்கும் கொரோனா!

தமிழகத்தில் ஊரடங்கு போடப்படும் நிலையா? அதிகரிக்கும் கொரோனா!

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பரவால் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு ஆனது மக்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் மற்றும் திரையரங்குகள் வணிக வளாகங்கள் போன்ற பகுதியில் குளிர்சாதனை பெற்றே பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் 50 பேர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். திருமண நிகழ்ச்சியில் 100 பேர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் எனவும் அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் சென்னையில் முககவசம் அணியாதவர்கள்ளிடம்  இருந்து ஒரு லட்சத்திற்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் வியாழக்கிழமை கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை  நெருங்கி நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்து 38 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் 47 பேர் கொரோனா தொற்றில் உயிரிழந்துள்ளனர். இன்று காலை 8 மணி நிலவரப்படி மேலும் புதிதாக 2038 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது இதனால் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,10,000 மாக அதிகரித்துள்ளது. இவ்வாறு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு போடப்படுமா என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.