கடக ராசிகாரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! முழு விவரங்கள் இதோ!

0
328

கடக ராசிகாரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! முழு விவரங்கள் இதோ!

வளமான கற்பனையும், எழுச்சியும், சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லும் கடக ராசி அன்பர்களே…!ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் கடக ராசிக்கு தொழில் ஸ்தானம் என்னும் பத்தாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் சுக ஸ்தானம் என்னும் நான்காம் பாவகத்திலும் பெயர்ச்சி அடைந்தார்.

ராகு கேது பெயர்ச்சிபலன்கள் :எதிலும் எளிமையான வழிமுறைகளை அறிந்து கொள்வீர்கள். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். சில தவறுகள் மூலம் புதிய பரிணாமத்தை உருவாக்குவீர்கள். எதிர்பாராத சில நிகழ்வுகளின் மூலம் மனதளவில் புதிய மாற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.மேலும் மூலிகை தொடர்பான தொழில்களில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். கதை, கட்டுரை போன்ற செயல்பாடுகளில் திறமைகள் வெளிப்படும். எதிர்பாலின மக்கள் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். சிறு சிறு அவப்பெயர் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த சில பிரச்சனைகளுக்கு முடிவு உண்டாகும்.

மூத்த உடன்பிறப்புகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். மறைமுகமான சில எதிர்ப்புகள் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிர்ப்பார்த்த சில உதவி கிடைக்கும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள்.

பொருளாதாரம் :தனவரவில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். சொத்துக்கள் சார்ந்த செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்படவும். தேவையற்ற ஆடம்பர செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். இழுபறியான சில தனவரவு கிடைக்கும்.

உடல் மற்றும் ஆரோக்கியம் :குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். அடிக்கடி பயணம் மேற்கொள்வதை குறைத்து கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.

 

ராகு கேது பெயர்ச்சி பெண்களுக்கு :திருமணமான தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புத்திரர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வாகனம் மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கைகூடும்.

 

ராகு கேது பெயர்ச்சி மாணவர்களுக்கு :மாணவர்களுக்கு கல்வியில் ஒருவிதமான மந்தத்தன்மையான சூழல் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர் கல்வி தொடர்பான சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் கல்விக்கு மீறிய அனுபவத்தை பெறுவீர்கள்.

 

ராகு கேது பெயர்ச்சியினால் ஏற்படும் நன்மைகள் :ராகு கேது பெயர்ச்சியின் மூலம் மனதளவில் புதிய மாற்றம் உண்டாகும். மேலும் இலக்குகள் பிறக்கும்.

 

கவனம் தேவை :பயணம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

வழிபாடு முறை :வெள்ளிக்கிழமைதோறும் வராஹி அம்மனை வழிபாடு செய்துவர சிந்தனை மற்றும் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே…!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

 

Previous articleஏன் பெண்கள் கட்டாயமாக நெற்றியில் குங்குமம் இட வேண்டும்?
Next articleபோலீசாரே அதிர்ச்சி?தூத்துக்குடி மாவட்டத்தில் மூட்டை மூட்டையாக கடத்தப்பட்ட ரேஷன் அரிசி?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here