போலீசாரே அதிர்ச்சி?தூத்துக்குடி மாவட்டத்தில் மூட்டை மூட்டையாக கடத்தப்பட்ட ரேஷன் அரிசி?

0
136

போலீசாரே அதிர்ச்சி?தூத்துக்குடி மாவட்டத்தில் மூட்டை மூட்டையாக கடத்தப்பட்ட ரேஷன் அரிசி?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள கசவன்குன்று பகுதியில் இன்று கொப்பம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகக்கிடமாக சென்று கொண்டிருந்த மினி ஆட்டோவை போலீசார்கள் தடுத்து நிறுத்தினர்.

 

பிறகு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் 35 கிலோ எடை கொண்ட 50 மூட்டை என சுமார் ஒன்றரை டன் ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அந்த ரேஷன் மூட்டைகள் பிரிக்கப்படாமல் கடைக்கு கொண்டு செல்லக்கூடிய நிலையில் ரேஷன் சீல் இருந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

 

மேலும் ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற இளைஞரை போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஆட்டோவை ஓட்டி வந்த பாண்டவர் மங்கலத்தினை சேர்ந்தவர் முத்துப்பாண்டி என்பது இவருடைய வயது 18. இந்த இளைஞரை பிடித்து விசாரித்த போது கோயில்பட்டியிலுள்ள ஒரு குடோனிலிருந்து தூத்துக்குடிக்கு கொண்டு செல்வதாக கூறினார்.

 

இதைதொடர்ந்து முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கடத்திய ஐம்பது மூட்டை ரேஷன் அரிசியையும் அதற்காக பயன்படுத்திய மினி ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த ரேஷன் அரிசி மூட்டை எங்கிருந்து வரப்பட்டது குடோன் உரிமையாளர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் இதுபோன்று ஏற்கனவே இரு தரப்பினிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ரேசன் அரிசி கடத்தப்பட்டதாக ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

 

இச்சம்பவம் அரங்கேறிய நிலையில் மீண்டும் ரேஷன் அரிசி நாளுக்கு நாள் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ரேஷன் அரிசி கடத்தப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Parthipan K