ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் உங்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா? இனி இவரிடம் கூறினால் போதும்!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குறைகளை களைவதற்கு மாவட்ட அளவிலான அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர், க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இத்திட்டத்தின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக மாவட்ட அளவில் குறைதீர்ப்பு அலுவலராக வழக்கறிஞர் .கே.சந்திரசேகரன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் அடையாள அட்டை, சம்பளம் உள்ளிட்டவைகள் தொடர்பான புகார் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், கிராமங்களில் இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் இடங்களில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு, தொழிலாளர்களிடம்
புகார் மனுக்களை பெற்றுக்கொள்ளவும், மேலும் இதுசம்பந்தமாக உரிய விசாரணை மேற்கொண்டு, மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாள் :20.07.2022 பயன்கள் வழங்கிட நடவடிக்கைகள் எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான புகார்களை நேரடியாகவோ அல்லது மாவட்ட குறை தீர்ப்பாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், தேனி 625 531 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்திடலாம். மேலும்,. கே.சந்திரசேகரன் அவர்களை 94880 47202 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் . க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.