கோவிலில் திருமணம் செய்ய இந்த சான்றிதழ் இருந்தால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ!

0
358
This certificate is enough to get married in temples! Here are the full details!
This certificate is enough to get married in temples! Here are the full details!

கோவிலில் திருமணம் செய்ய இந்த சான்றிதழ் இருந்தால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ!

நேற்று அறநிலைத்துறை வெளியிட்ட அறிவிப்பில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு அனுமதி பெற இதுவரை இதர சான்றுகளுடன் முதல் திருமணம் சான்று கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆனது முதல் திருமணச் சான்றிதலுக்கு  பதிலாக இ-சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படும் திருமணமாகாதவர் என்ற சான்றை பெற்று சமர்ப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தி வருகிறது.

மேலும் இனிமேல் திருக்கோயில்களில் திருமணம் நடத்த விரும்புவர்கள் திருமணம் ஆகாதவர் என்ற சான்றை இ சேவை மையம் மூலம் பெற்று சம்பந்தப்பட்ட திருக்கோயில்களில் சமர்ப்பித்தால் போதுமானது எனவும் இது குறித்து திருகோவில்களின்  அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் திருக்கோயிலின் திருமண நடத்த அனுமதி வழங்குவதற்கு உரிய சான்றுகளைத் தவிர வருவாய் துறையால் வழங்கப்படாத இதர சான்றிதழை வழங்க வேண்டும் என கூறினால் அறநிலையத்துறை தலைமை அலுவலக தொலைபேசி (044-28339999) என்ற எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Previous articleகுடியரசு தலைவர் தேர்தலில் 53 செல்லாத வாக்குகள்… தமிழகத்தில் எத்தனை தெரியுமா?
Next articleஆசியக் கோப்பை தொடர் பற்றி முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி!