ஆசியக் கோப்பை தொடர் பற்றி முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி!

0
123

ஆசியக் கோப்பை தொடர் பற்றி முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பிசிசிஐ தலைவர் கங்குலி!

ஆசியக் கோப்பை தொடர் ஐக்கிய அரபுகள் அமீரகத்துக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ தலைவர் அறிவித்துள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இந்த போட்டி அந்த தொடரின் இறுதிப் போட்டியை பார்த்தவர்களை விட எண்ணிக்கை அதிகம்.

இலங்கையில் ஆகஸ்ட்டில் நடக்கும் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்க இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி பெற்றுள்ளதால் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் போட்டி தொடங்கும், இறுதிப் போட்டி செப்டம்பர் 11-ஆம் தேதி வரை டி 20 தொடராக நடைபெறும். இதில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதக்கூடும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இலங்கையில் நடக்க இருந்த தொடர் ஐக்கிய அரபுகள் அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். இதற்கு இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார சூழல்கள் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. மேலும் இதுபற்றி பேசியுள்ள கங்குலி “ஐக்கிய அரபுகள் அமீரகத்தி தற்போது மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.” என தெரிவித்துள்ளார்.