இந்த மாநிலத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்குதனி தனி பள்ளிகள் இல்லை! அரசின் புதிய உத்தரவு!
கல்வித்துறையின் முதன்மை செயலாளர் பொதுகல்வி இயக்குனர் உள்ளிட்டோர் குழந்தைகள் உரிமைய ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் அரசு மகளிர் பள்ளிகள் மற்றும் அரசு ஆண்கள் பள்ளிகள் என இரண்டு பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. கேரளாவில் மொத்தம் 280 பெண்கள் பள்ளிகளும் 164 ஆண்கள் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது இந்த நிலையில் ஆண்கள் மற்றும் மகளிர் பள்ளிகள் குறைந்த அளவிலேயே செயல்படுகின்றது. இந்த நிலையில் இவ்வாறு தனித்தனியாக இயங்கும் பள்ளிகளை மூட கேரளா அரசு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து வரும் கல்வியாண்டில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை ஒன்றிணைத்து இருபாலர் படிக்கும் பள்ளிகளாக மாற்றி அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் இணை கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று கேரளா கல்வித்துறை குழந்தைகள் உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முன்பு பள்ளிகளில் உள்ள கழிவறை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இணைக் கல்வியின் அவசியம் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழந்தை உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வரும் கல்வி ஆண்டு முதல் இணை கல்வியை அமல்படுத்த 90 நாட்களில் செயல்திட்டத்தை உருவாக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.