இனி சென்னை மாநகராட்சியில் குப்பைகளை கொட்டினால் தகுந்த அபராதம் விதிக்க உத்தரவு!.இதுவரை இலட்சக்கணக்கில் வசூல்!..
சென்னை மாநகராட்சியில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் நிலம் பெரிதும் மாசடைகின்றது.இதனைத் தொடர்ந்து குப்பைகளை கொட்டும் நபர்களுக்கு தகுந்த அபராத விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது மட்டுமல்லாமல் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அளிக்கப்பட்டு அந்த இடங்களில் பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் மற்றும் வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து கடந்த ஏழாம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை சென்னையில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டியவர்களிடமிருந்து ஒரு அஞ்சு லட்சத்துக்கு 86 ஆயிரத்து 820.
கட்டுமான கழுவுகளை கொட்டியவர்களிடமிருந்து ரூ 5 லட்சத்து 48 ஆயிரத்து 600 மற்றும் அரசு மாநகராட்சி கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டியவர்களிடமிருந்து ரூ 80 ஆயிரத்து நானூறு என மொத்தம் ரூ.12,13,82 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.என பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.