அதிக மருத்துவ பலனை கொண்ட மூலிகை? இதன் சாற்றை குடித்தால் போதும்!.. நோய்கள் பறந்தோடிடும்..
கரிசலாங்கண்ணியை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் அதில் இவ்வளவு நன்மை இருப்பதை தெரிந்திருக்க மாட்டோம். சில பேருக்கு கரிசலாங்கண்ணி என்னவென்றால் தெரியாமல் இருக்கும். இதை உடலில் உள்ள அனைத்து நோய்களுக்கும் தீர்வு காணும். முக்கியமாக குழந்தைகளுக்கு இதை அரைத்து அதன் சாறு எடுத்து குழந்தைகளுக்கு தேன் கலந்து கொடுத்தால் நெஞ்சு சளி நீங்கும். வாரத்திற்கு இரண்டு முறை இதை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளி முற்றிலும் போய்விடும்.இந்த கரிசலாங்கண்ணி மூலம்பல கொடிய வியாதிகளில் இருந்து நம்மை பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக் கீரையாகும்.
கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு சுண்டைக்காய் அளவில் எடுத்து பாலில் கலந்து வடிகட்டி காலை மற்றும் மாலை சாப்பிட வேண்டும். சிறுவர்களுக்கு மூன்று நாட்கள் கொடுத்தால் போதும். அதன்படி பெரியவர்களுக்கு ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும். ஆங்கில மருந்து சாப்பிடும் இந்த காலத்தில் இதையெல்லாம் உதாசினம் செய்பவர்கள் அதிகம். நாட்டு வைத்தியம் சாப்பிடுவதற்காக உப்பில்லாப் பத்தியம் இருக்க வேண்டும்.கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை முழுமையாக குறையும்.
கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்திற்கு இரண்டு நாள் இந்த கீரையைச் சமைத்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும். இதனால் நோய் நொடி இன்றி ஆயுள் முழுக்க வாழலாம்.