இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி…. வெஸ்ட் இண்டீஸை வொயிட் வாஷ் செய்யுமா இந்தியா?

0
258

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி…. வெஸ்ட் இண்டீஸை வொயிட் வாஷ் செய்யுமா இந்தியா?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று மாலை நடக்க உள்ளது.

இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களின் வெற்றிக்குப் பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது. இதில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவர் வரை பரபரப்பாக செல்ல, இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்த போது அக்ஸர் படேலின் அதிரடி அரைசதத்தால் இந்திய அணி த்ரில் வெற்றியைப் பெற்று தொடரைக் கைப்பற்றியது. அவர் 35 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இதன் மூலம் இந்திய 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

இதையடுத்து இன்று இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியடையும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸை க்ளீன் ஸ்வீப் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅதிக மருத்துவ பலனை கொண்ட மூலிகை? இதன் சாற்றை குடித்தால் போதும்!.. நோய்கள் பறந்தோடிடும்..
Next articleமாணவர்களின் கவனத்திற்கு! இந்த கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here