சரவணபவன் ராஜகோபால் கதையை படமாக எடுக்க எதிர்ப்பு… வழக்கறிஞர் ஆவேசம்

0
197

சரவணபவன் ராஜகோபால் கதையை படமாக எடுக்க எதிர்ப்பு… வழக்கறிஞர் ஆவேசம்

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி வழக்கை மையமாக வைத்து தோசா கிங் என்று ஒரு படம் இந்தியில் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் நாட்டில் பரபரப்பாக பேசப்பட்ட அரசியல் சம்மந்தப்படாத வழக்குகளில் ஒன்றாக சரவணபவன் ராஜகோபால் வழக்கு இருந்தது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இந்த வழக்கில் கடைசியில் ராஜகோபால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

இந்த வழக்கில் வெற்றி பெற்ற ஜீவஜோதிக்கு பாராட்டுகள் குவிந்த நிலையில் இப்போது அவர் பாஜகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் ஜீவஜோதியின் இந்த வழக்கை திரைப்படமாக ‘தோசா கிங்’ என்று பாலிவுட்டில் திரைப்படமாக எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த படத்தை ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் ராஜகோபாலின் வழக்கறிஞர் கணேசன் என்பவர் ‘சரவணபவன் ராஜகோபால் வழக்கை படமாக எடுத்து அவரை அவதூறு செய்தால் கண்டிப்பாக வழக்கு தொடருவோம்’ என எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார். அதனால் தோசா கிங் திரைப்படம் தொடங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Previous articleமாணவர்களின் கவனத்திற்கு! இந்த கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!
Next articleமீண்டும் ஒரு மாணவி தற்கொலை! காரணம் என்ன வெளிவரும் திடுக்கிடும் தகவல்!