ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்  தேர் திருவிழாவை முன்னிட்டு!..மீண்டும் இந்த மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை !.

0
233
On the occasion of Srivilliputhur Andal Chariot Festival!..again school holidays in this district!.
On the occasion of Srivilliputhur Andal Chariot Festival!..again school holidays in this district!.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்  தேர் திருவிழாவை முன்னிட்டு!..மீண்டும் இந்த மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு விடுமுறை !.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் அன்று  ஆடிப்பூர திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம் .இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக  கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக  இந்த தேர்த்திருவிழா நடைபெறமால் போனது.

கொரோனா தொற்று சற்று  அடங்கிய இந்நிலையில் இந்த ஆண்டுக்காண திருவிழா நடை பெற இருக்கிறது  என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள்.அதன் படி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று  கொடியேற்றத்துடன் தொடங்கி மிகச் சிறப்பாக  நடைபெற்று வருகிறது. 28 ஆம் தேதி அதாவது இன்று  கருட சேவை நிகழ்ச்சி  நடைபெறுகிறது.

இதனையடுத்து 30 ஆம் தேதி ஆண்டாள் சயன சேவை நடைபெறவுள்ளது.விழாவின் சிகரநிகழ்ச்சியான ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா வருகிற 1ஆம் தேதி நடைபெறுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால் தேரோட்டத்தை சிறப்பாக நடத்த ஆண்டாள் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தையொட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கலெக்டர் மேகநாதரெட்டி அறிவித்துள்ளார். விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 13 ஆம்  தேதி பணி  செயல்படும் நாளாக செயல்படுத்தப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Previous article22 வருடங்களாக குளிக்காமல் இருக்கும் அதிசய நபர்… மனைவி, மகன்கள் இறந்தபோதும் அசராத மனிதன்!
Next articleதாய்ப்பால் கொடுக்கும்போது நடந்த அதிர்ச்சி சம்பவம்… தெலங்கானாவில் நடந்த சோகம்!