ஒப்பந்ததாரரின் கட்டளையை மீறிச் சென்ற பல பேர் மாயம்!! தேடும் பணி தீவிரம்!.. அழுகிய நிலையில் சடலம் மீட்பு?..
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தின் குருங் குமே மாவட்டத்தில் இந்திய மற்றும் சீனா எல்லை ஒட்டி இருக்கின்றது. இதில் தமின் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பெரிய அளவில் சாலை உள்கட்ட அமைப்பு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தலைநகர் இடா நகரிலிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த தமின் வட்டத்தில் நடந்த இந்த பணியில் பல்வேறு தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இதில் அசாம் சேர்ந்த தொழிலாளர்கள் தான் பலர் பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு அவர்கள் அனைவரும் தனது சொந்த ஊருக்கு திரும்ப விரும்பினர். எனவே பக்ரீத் பண்டிகையை கொண்டாட விடுமுறை தரும்படி பெங்கிய பதோ என்ற ஒப்பந்ததாரரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் ஒப்பந்ததாரர்கள் இதை அனுமதிக்க மறுத்தனர்.
அவர்களின் பேச்சையும் மீறி அனைவரும் யாருக்கும் தெரியாமல் பக்ரீத் பண்டிகையை கொண்டாட வனப்பகுதிகளின் வழியே கால்நடையாக நடந்து சென்றனர். இதில் அங்குள்ள அனைவரும் இரு குழுக்களாக பிரிந்து சென்றனர்.இரு குழுக்களாக பிரிந்த அவர்கள் சில மணி நேரத்தில் காணவில்லை. இந்த தகவலை அறிந்த ஒப்பந்ததாரர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பின்னர் அங்குள்ள நதி ஒன்றின் அருகில் ஒருவரது உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இதனால் காணாமல் போன மற்ற 18 பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என அஞ்சப்பட்டது . இதனைத் தொடர்ந்து விமானப்படையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடும் பணி தீவிரமடைந்து வந்தது.இதில் ஏழு பேர் மீட்கப்பட்டார்கள்.
மீக்கப்பட்ட இவர்கள் மிகவும் சோர்வாகவுள்ள நிலையில் விரைவில் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். ஹிப்மத் அலி என்பவர் ராக் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை மாவட்ட துணை ஆணையர் நிகீ பெங்கியா கூறுகையில் காணாமல் போன அசாம் தொழிலாளர்களில் ஐந்து பேரின் உடல்கள் தபா என்ற பகுதியிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இதனால் மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளார்கள். ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.அதில் ஒருவரை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மேலும் மீதமுள்ளவர்களை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.