‘வாரிசு படம் குடும்ப படமா?…’ நடிகர் சரத்குமார் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

0
164

‘வாரிசு படம் குடும்ப படமா?…’ நடிகர் சரத்குமார் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் சரத்குமார் வாரிசு படம் பற்றிய முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் இப்போது  இயக்குனர் வம்சி இயக்கி வரும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்த திரைப்படம் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. குடும்ப அரசியல் சம்மந்தப்பட்ட கதையாக செண்ட்டிமெண்ட்டுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதையாக  வாரிசு உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் விஜய்யின் தந்தையாக சரத்குமார் நடிக்கிறார்.

இந்நிலையில் முதல் முறையாக படம் பற்றி இப்போது அவர் பேசியுள்ளார். இது சம்மந்தாக அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘வாரிசு குடும்ப படமா?” எனக் கேட்ட போது, அதற்கு “குடும்ப படம் மட்டுமல்ல, அதில் ட்ராமாவும் இருக்கிறது. ஆக்‌ஷன் எமோஷன் பாடல்கள் எல்லாம் இருக்கிறது” என்று கூறியுள்ளார். சரத்குமாரின் இந்த லேட்டஸ்ட் அப்டேட் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகியுள்ளது.