பதிலுக்கு பதில்…. டிவிட்டர் மேல் எலான் மஸ்க் அதிரடியாக வழக்கு!

0
245

பதிலுக்கு பதில்…. டிவிட்டர் மேல் எலான் மஸ்க் அதிரடியாக வழக்கு!

டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக இருந்த எலான் மஸ்க் அதை கிடப்பில் போட்டுவிட்டார். இது பரபரப்பைக் கிளப்பியது.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக அறிவித்தார். முதலில் இதற்கு ட்விட்டர் நிறுவனம் எதிர்ப்புகளை தெரிவித்தாலும், பின்னர் அதிகளவிலான பங்குகள் எலான் மஸ்க் கைவசம் செல்ல இருந்ததால் அதற்கு சம்மதித்தது.

இதற்கிடையில் ட்விட்டரில் உள்ள போலி கணக்குகளின் எண்ணிக்கை 5 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த வேண்டும், அது சம்மந்தமான தரவுகள் வேண்டும் என எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்திடம் கேட்டிருந்தார். அந்த விவரங்கள் வரும் வரை ட்விட்டரை வாங்குவதை கிடப்பில் போடுவதாக அறிவித்தார்.

இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் அதிரடியாக ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீதம் வரை வீழ்ந்தன. இந்நிலையில் இப்போது எலான் மஸ்க்குக்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்போது எலான் மஸ்க் பதிலுக்கு டிவிட்டர் நிறுவனம் மேல் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் டிவிட்டர் நிறுவனத்துக்கு எதிராக 164 பக்க ஆவணத்தை தாக்கல் செய்துள்ளாராம். இதனால் டிவிட்டர் நிறுவனத்துக்கும் மஸ்க்குக்கும் இடையிலான மோதல் மேலும் அதிகமாகியுள்ளது.

Previous articleவயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி சடலமாக மீட்பு!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…
Next article‘வாரிசு படம் குடும்ப படமா?…’ நடிகர் சரத்குமார் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here