சங்ககிரி அருகே பட்ட பகலில் இரும்பு குண்டை திருடிய நபரை கையும் களவுமாக பிடித்த பொது மக்கள்!..
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மதுரைக்காடு பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த தொழிற்சாலையின் உரிமையாளர் நல்லா கவுண்டர் மகன் இராதாகிருஸ்ணன் ஆவர்.இவர் அதே பகுதியிலுள்ள தேங்காய் தொட்டிகளை தூளாக்கி அவற்றை ஏற்றுமதி செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த கொரோனா கால இடைவெளியில் ஒரு வருடம் காலமாக செயல்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டார்.இதனால் பராமரிப்பு செய்ய வேண்டிய ஆட்களும் வராமல் இருந்தார்கள்.இதனை சாதகமாக பயன்படுத்தி ஒரு நபர் தினமும் அந்த தொழிற்சாலையை நோட்டம் போட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அங்கு யாரும் இல்லாத நேரத்தில் தொழிற்சாலையில் இருந்து 200 கிலோ மதிக்க தக்க ஒரு இரும்பு குண்டை திருட முயன்றுள்ளார்.திருடிய அந்த இரும்பு குண்டை வெளியே எடுத்து வரும் போது இராதாகிருஸ்ணன் அதை பார்த்துள்ளார். அவர் அருகில் உள்ள டீ கடைக்கு எதற்தமா வந்திருக்கிறார். திருடன் இவரை கண்டதும் வேகமாக தனது இருசக்கர வாகனத்தை இயக்கிவுள்ளர்.
பின்னர் இராதாகிருஸ்ணன் திருடன் திருடன் என சத்தம் போட்டு பின்னாடி ஓட்டிவுள்ளர்.இவர் சத்தம் கேட்ட அருகில் உள்ளவர்கள் அந்த திருடனை கையும் களவுமாகப் பிடித்தனர்.பின்னர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல் துறையினர் இரும்பு குண்டை திருடிய திருடனை கைது செய்து விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில் அந்த திருடன் நாமக்கல் மாவட்டம்,குமாரபாளையம் வட்டம் அடுத்த பச்சாம்பாலையம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.இவர் செங்குட்டுவன் மகன் பூபதி இவருடைய வயது 28.மேலும் இரும்பு குண்டை திருடிய காரணத்தை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.பட்ட பகலில் உரிமையாளர் கண் முன்னே திருடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.