குமரி மாவட்டத்தில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்! தைரியத்துடன் நடந்து கொண்ட பெண்ணிற்கு குவியும் பாராட்டு!

0
70
Robbery incident in Kumari district! Appreciation for the woman who behaved with courage!
Robbery incident in Kumari district! Appreciation for the woman who behaved with courage!

குமரி மாவட்டத்தில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்! தைரியத்துடன் நடந்து கொண்ட பெண்ணிற்கு குவியும் பாராட்டு!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கூட்டமாவு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி சுபா (35). விஜயகுமாரின் தங்கை சுஜி (30). இவர்கள் மூவரும்   நேற்று அழகிய மண்டபத்தில் நடந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அவர்களின் பிள்ளைகளுடன் சென்றனர். மேலும் இரவு ஒன்பது மணி அளவில் நிகழ்ச்சி முடிந்ததால் விஜயகுமார் தனது காரில் பிள்ளைகளை அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அந்த காரை பின் தொடர்ந்து சுபாவம், சுஜியும் ஸ்கூட்டர்ரில்  சென்று கொண்டிருந்தார்கள்.

மேலும் இந்த ஸ்கூட்டரை சுபா இயக்கினார் தங்கை சுஜி பின்புறமாக அமர்ந்திருந்தார். சுபா மற்றும் சுஜி செல்லும் ஸ்கூட்டரை பின்தொடர்ந்து ஒரு  மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அந்த மோட்டார் சைக்கிள் மூன்று நபர்கள்  வந்த நிலையில் ஸ்கூட்டரின் பின்னால்  சுஜி அமர்ந்து இருந்தால் சுஜியின் களத்தில் இருந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்தனர். அவர்கள் தங்கசங்கிலியை  பறிக்கமுயன்றதை  கவனித்த சுபா  ஸ்கூட்டியை இயக்கியவாரே தனது காலால் மோட்டார் சைக்கிளை உதைத்தார்.

மேலும் அவர் உதைத்தலில் மோட்டார் சைக்கிளும்  ஸ்கூட்டரும் நிலை தடுமாறி கீழே விழுந்தது உடனே மோட்டார் சைக்கிளிலிருந்து இரண்டு நபர்கள் தப்பி சென்றனர். ஒருவர் மட்டும் மோட்டார் சைக்கிளின் அடியை சிக்கிக்கொண்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மோட்டார் சைக்கிள் சிக்கிய திருடனை பிடித்தனர். மேலும் இந்த  சம்பவம் குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலின் பேரில்  சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை  போலீசார் பிடிபட்ட நபரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது இந்த விசாரணையில் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பது தெரியவந்தது. தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.  மேலும் தப்பி சென்ற இரண்டு நபர்களை தேடி வருகின்றார்கள் . மேலும் தைரியத்துடன் இந்த திருட்டை தவிர்த்த சுபாவிற்கு போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவர்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றார்கள்.

author avatar
Parthipan K