பளார் பளார் என அறைந்த கணித ஆசிரியர்!.. மாணவியின் கதறல் சத்தம்.. வெளிவந்த பகீர் காட்சி..

Photo of author

By Parthipan K

பளார் பளார் என அறைந்த கணித ஆசிரியர்!.. மாணவியின் கதறல் சத்தம்.. வெளிவந்த பகீர் காட்சி..

மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றார்கள். சிறு குழந்தைகள் முதல் இந்த பள்ளியில் தான் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் ஆசிரியர்களாக பலர் பணியமர்த்தப்பட்டார்கள். அதில் ஒருவர் ஜினேந்திர மோக்ரா என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் மூன்றாம் வகுப்புகளுக்கு கணக்கு ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வகுப்பில் பத்துக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் படித்து வந்தனர். இந்நிலையில்  மூன்றாம் வகுப்பு மாணவி ஒருவரை அழைத்து இயல் எண்களை வரிசையாக கூறும்படி அந்த ஆசிரியர் மாணவியை அழைத்தார். மாணவியோ ஒன்று முதல் கடகடவென 34 வரைக்கும் கூறினார். அதன் பிறகு 35 வது எண்களை சொல்வதில் தடுமாறிவுள்ளார்.

இதில் கோபமடைந்த அந்த கணித ஆசிரியர்  மாணவியை மிக கடுமையாக தாக்கியுள்ளார். அந்த மாணவியோ அழுதபடி அவரை விட்டு சென்றது. மீண்டும் அவர் அருகே சென்று கன்னத்தைப் பிடித்து அறைந்தார் இந்த ஆசிரியர். இதனால் சக மாணவர்களோ பயத்தில் உறங்கிப் போயிருந்தனர். இந்த கொடூர சம்பவத்தை  அங்கு அருகில் இருந்த ஒரு நபர் வீடியோவாக எடுத்துள்ளார்

. இந்த வீடியோவை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துள்ளார்.இந்த வீடியோவை பார்த்த  குழந்தைகளின் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த காட்டு மிரண்டியை கடுமையாக தண்டிக்க வேண்டும் என சிலர் இணையதளத்தில் வலியுறுத்துகின்றனர். இந்த சம்பவம் அப்பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றது