அடுத்தடுத்து இரு வீடுகளில் கைவரிசை காட்டிய திருடரை கைது செய்த போலீசார்!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்..
வெள்ளக்கோவில் அருகே உள்ள பச்சாபாளையத்தை சேர்ந்தவர் சௌந்தரராஜன் இவருடைய வயது 50.இவரது மனைவி செல்வராணி வயது 4.5 இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னால் காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்கள். பிறகு வேலை முடிந்ததும் வீட்டிற்கு வந்த போது வீட்டிலுள்ள பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டை முழுவதுமாக சோதனை செய்தனர். அப்போது பத்தாயிரம் ரூபாய் பணமும் செல்போனையும் மர்ம கும்ப கும்பல் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.மேலும் இவர்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதேபோல் அதே பகுதியிலுள்ள தையல் தொழிலாளியான மகேஸ்வரன் இவரது வயது 30.இவர் வீட்டை பூட்டிவிட்டு சாவியை தனது குளியல் அறையில் வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார்.பிறகு வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டின் வெளியே போட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் உள்ளே சென்ற மகேஸ்வரன் பீரோவில் இருந்த ஒன்னே முக்கால் பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்த வெள்ளக்கோவில் போலீசாரிடம் தகவல் கொடுத்தார். இந்நிலையில் இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அதனைதொடர்ந்து நேற்று காலை வெள்ளக்கோவில் அருகே குறுக்கத்தியில் போலீசார் வாகன சோதையில் ஈடுபட்டு வந்தனர் அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த இரண்டு பேரும் தஞ்சை மாவட்டம் திருக்கருவக்காவுரை சேர்ந்த குமரன் என்ற முத்துக்குமரன் வயது 27 மற்றும் தஞ்சை மாவட்டம் பாபா நாசத்தை சேர்ந்த குருமூர்த்தி வயது 22 என்பதும் தெரியவந்தது.
இதில் சந்தேகமடைந்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணை நடத்தினர்.விசாரணையில் இருவரிடமும் போலீசார்கள் கேள்விகளை கேட்டனர்.அப்போது இருவரும் மாத்தி மாத்தி கேள்விக்கு பதில் அளித்தனர். அதன்படி சௌந்தரராஜன் மற்றும் மகேஸ்வரன் வீட்டில் இவர்கள்தான் திருடியது அப்பாட்டமாக தெரியவந்தது. இதனையடுத்து இந்த இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் நகைகள் மற்றும் செல்போன்களை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து இந்த இரு திருடர்களையும் காங்கேயம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.