தப்பு செய்வதால் பெற்றோர்கள் கண்டிக்கதான் செய்வார்கள்!. மாணவி எடுத்த விபரீத முடிவு.!… சோகத்தில் அப்பகுதி மக்கள்!..

Photo of author

By Parthipan K

தப்பு செய்வதால் பெற்றோர்கள் கண்டிக்கதான் செய்வார்கள்!. மாணவி எடுத்த விபரீத முடிவு.!… சோகத்தில் அப்பகுதி மக்கள்!..

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்.இவருடைய மனைவியும் இவரும் அயோத்தியா பட்டினத்திலுள்ள வெவ்வேறு அரிசி அரவை ஆலைகளில் கணக்காளராக  வேலை செய்து வந்திருந்தனர்.இந்த தம்பதிக்கு சுகந்தி என்கின்ற மகளும் அபிஷேக் என்கின்ற மகனும் உள்ளார்கள்.

தற்போது மகளின் வயது 16 மற்றும் மகனின் வயது 13.சுகந்தி அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கடந்தா ஆறு மாத காலமாக மாணவி ஒரு வாலிபரிடம் செல்போனில் அவ்வப்போது பேசி வந்துள்ளதாக தெரிகிறது. இதனால்  மாணவியின் பெற்றோர் சந்தேகமடைய ஆரம்பித்தனர்.

இந்நிலையில் மாணவியின் பெற்றோர் படிக்கும் வயதில் இது வேணாம்.நீ ஒழுக்கமாக படி தேவையில்லாத வேலை எல்லாம் செய்யக்கூடாது என மாணவியை கடுமையாக அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து நேற்று காலை வழக்கம் போல் கணவன் மனைவியும் அரிசி மில்லுக்கு வேலை செய்திருந்தனர்.

அதே நேரத்தில் அந்த சிறுமி நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து அந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்நேரத்தில் ரமேஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த மாணவி  விட்டத்தில் தொங்கிய மகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.இதனையடுத்து ரமேஷ் வாழப்பாடி காவல் துறையிடம் தகவல் தெரிவித்தார்.

இந்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்றனர். மேலும் சுகந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கின்ற வயதில் படிப்பை முக்கியம் என நினைக்காமல் வாலிபர் ஒருவருடன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் பதினொன்றாம் மாணவி எடுத்த விபரீத முடிவு. இதனால் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.