எஸ் பி ஐ வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செல்ல தேவை இல்லை! இனி வாட்ஸ் அப் மூலமே அனைத்தையும் செய்து கொள்ளலாம்!எப்படி தெரியுமா?
பொதுமக்கள் வங்கிகளுக்கு சென்று பணம் போடுவது மற்றும் எடுப்பது நாளடைவில் குறைந்து விட்டது. உலகமே டெக்னாலஜி மையமாக மாறும் வகையில் அனைத்தையும் ஆன்லைனிலேயே செய்து விடுகின்றனர். அந்த வரிசையில் ஹச் டி எஃப் சி, ஐ சி ஐ சி ஐ ஆகிய வங்கிகள் வாட்ஸ் அப் மூலம் இணைந்து பணத்தை பரிவர்த்தனை செய்து கொள்ளும் முறையை கொண்டு வந்துள்ளனர்.
இதனால் வாட்ஸ்அப் உபயோகிக்கும் பயனாளிகள் அதன் மூலமே பணத்தை பரிவர்த்தனை செய்து கொள்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக எஸ் பி ஐ வங்கியும் வாட்ஸ்அப் உடன் தனது அக்கவுண்டை இணைத்துக் கொள்ளும் வசதியை கொண்டு வந்துள்ளது. எனவே இனி எஸ் பி ஐ வங்கி வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் மூலமே பணத்தை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். அது மட்டும் இன்றி அக்கவுண்டில் இருக்கும் இருப்பு தொகை என அனைத்தையும் வாட்ஸ் அப் மூலமே அறிந்து கொள்ளலாம்.
இந்த சேவையானது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு வைத்திருந்தால் மட்டுமே உபயோகிக்க முடியும். இதை உபயோகிக்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் முதலில் தனது தொலைபேசி எண்ணில் இருந்து எஸ்பிஐ வங்கிக்கு 5676791 என்ற எண்ணுக்கு WAOPTIN என்ற குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். அதனை அடுத்து கிரெடிட் கார்டில் பின்பக்கத்தில் உள்ள நான்கு இலக்க எண்ணையும் சமர்ப்பிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து எஸ் பி ஐ வங்கியில் இருந்து தங்களது செல்போனிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அந்த குறுஞ்செய்தி வரும் எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும். பிறகு அந்த எண்ணிற்கு ஹாய் எஸ்பிஐ என வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். அதற்கு எஸ் பி ஐ வங்கியிடம் இருந்து டியர் கஸ்டமர் வெல்கம் டு எஸ் பி ஐ என்ற செய்தி வரும். இதற்கு அடுத்து பண பரிமாற்றம், இருப்பு தொகை என அனைத்தையும் கண்டு கொள்ளலாம்.