வெள்ளரிக்காயின் மருத்துவப் பயன்கள்! இத்தனை நோய்கள் குணமாகும்!

0
157

வெள்ளரிக்காயின் மருத்துவப் பயன்கள்! இத்தனை நோய்கள் குணமாகும்!

கோடை காலங்களில் அனைவரும் தேடி அலையும் பழங்களில் முதன்மையான ஒன்று வெள்ளரிக்காய். மேலும்வெள்ளரிக்காய் குறைவான கலோரி அளவைக் கொண்டது எனவும் கூறப்படுகிறது.

வெள்ளரிக்காய் மிக குளிர்ச்சி தன்மை கொண்டது. செரிமான பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் நன்கு செரிமானம் ஆகும். மேலும் வெள்ளரியில் உள்ள நீர் சத்து நாக்கில் உள்ள வறட்சியைப் போக்குவதுடன் பசியை தூண்டுவதற்காக உதவுகிறது.

மேலும் சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணை ஆற்ற உதவுகிறது அது மட்டுமல்லாமல் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.

வெள்ளரிக்காய் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்க உதவுகிறது. மேலும்

வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை குணமாக்கும். 100 கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் எடுத்துக்கொண்டு அதனுடன் இளநீரையும் கலந்து, ஒருமணிக்கு இரண்டு முறை அருந்த வேண்டும். வறண்ட தோல், காய்ந்து விட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு சாப்பிட்டு வந்தால் வறட்சித் தன்மையை நீக்கும். மேலும்

நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் ஆற்றலையும் அதிகரிக்கச்செய்யும். வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும்.

மேலும் வெள்ளரியில் தாதுப் பொருட்களான சோடியம்,மக்னேசியம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், மற்றும் குளோரின் இதில் உள்ளது . மேலும் இரத்ததில் உள்ள சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் வெள்ளரிக்காய் கல்லீரலில் ஏற்படும் சூட்டைத் தணிப்பதால் நோய் குணமாகும்.

 

Previous articleபட்டி தொட்டி தாண்டி சிட்டியிலும் விருமன் கொடிபறக்குது! அதிக வசூலை குவித்து வரும் வெற்றிபடம்..
Next articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!