திருமணமான புதிய தம்பதிக்கு அரசு கொடுக்கும் புதிய பரிசு? என்னன்னு கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க!..

Photo of author

By Parthipan K

திருமணமான புதிய தம்பதிக்கு அரசு கொடுக்கும் புதிய பரிசு? என்னன்னு கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க!..

 

இந்த காலங்களில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பல பிரச்சினைகளும் நாம சந்திக்க இருக்கின்றோம். இதனை கட்டுக்குள் கொண்டு வர ஒடிசா மாநிலம் அரசு ஒரு புதிய யுத்தியை கையாள திட்டமிட்டுள்ளது. அது என்னவென்றால் புதிதாக திருமணமாகும் தம்பதிகளுக்கு ஒரு கிப்ட் பேக்கை வழங்கப்பட உள்ளது. அந்த கிப்ட் பேக்குள் குடும்ப கட்டுப்பாட்டு தொடர்பான புத்தகங்கள் மற்றும் காண்டம், கருத்தடை மாத்திரைகள், திருமண பதிவு சான்று, போன்றவை இதில் அடங்கும்.

 

ஆண்களுக்கு மட்டுமல்லாமல் பெண்களுக்கும் சில திட்டங்களை அந்நாட்டு அரசு கொண்டுவந்துள்ளது. அதில் பெண்களுக்கு என்று குங்குமம், சீப்பு, கண்ணாடி, நகம் வெட்டும் கருவி , கட்சிப், டவல் ,வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ளும் சாதனம், பவுடர், சோப்பு உள்ளிட்டவை இடம்பெறும். வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும். புதுமண தம்பதிகளின் வீட்டிற்குச் சென்று அரசு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டம் குறித்து பலரும் தங்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.இந்த திட்டம் பற்றிய தகவல் சமூக ஊடகங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.