மாநகரப் பேருந்து மோதி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பலி! தப்பிச்சென்ற ஓட்டுநர்!

Photo of author

By Parthipan K

மாநகரப் பேருந்து மோதி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பலி! தப்பிச்சென்ற ஓட்டுநர்!

இன்று 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் விழா கோலமாக காட்சியளித்து வருகிறது. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் நேரு நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி லட்சுமி (17). இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட மாணவி விழா முடிந்ததும்  மாணவி சென்னை குரோம்பேட் அஸ்தினாபுரம் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் அரசு மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்தானது மாணவச் சென்று கொண்டிருந்த சைக்கிளின் மீது மோதியது. அதில் கீழே விழுந்த மாணவியின் தலையின் மேலே அரசு பேருந்து ஏறி இறங்கியதில் மாணவி லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து  அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில் அஸ்தினாபுரம் சாலையில் இரண்டு பக்கமும் கடைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் குறுகிய சாலையாக காணப்படுவதால் தான் இந்த விபத்து ஏற்பட்டது எனவும் கூறப்படுகிறது. மேலும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து ஏற்பட்டதும் அரசு பேருந்து ஓட்டுனர் தப்பிச்சென்று அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பள்ளி மாணவி பரிதாபமாக அரசு பேருந்து மோதி பலியான காரணத்தால் அரசு இழப்பீடு தொகை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.