பிரதமர் மோடி கூறிய இந்த 5 உறுதி எடுத்துக்கொண்டால் போதும்!..நமது இந்தியா வளர்ச்சி நாடாக மாறிவிடும்!..
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு பிறந்துள்ளது.சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதன்படி வழக்கம்போல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.பிறகு அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தொடங்கினார்.
இதனை தொடர்ந்து அவர் 9ஆவது ஆண்டாக அவர் செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் தேசிய கொடியை ஏற்றும் போது 21 குண்டுகள் முழங்க, இசை வாத்தியங்களுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கூறியதாவது, இந்த நாள் இந்தியாவுக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள்.புதிய உறுதிப்பாட்டுடன் புதிய இலக்கை நோக்கி நடைபோட வேண்டிய நாள். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு.
அதில் இருந்துதான் நமக்கு வலிமை கிடைக்கிறது. தேசபக்தி என்ற பொதுவான நூலிழையால் இந்தியா அசைக்க முடியாத நாடாக இருக்கிறது.இன்னும் 25 ஆண்டுகளில் நாம் சுதந்திர தின நூற்றாண்டு விழா கொண்டாட உள்ளோம்.
அந்த நேரத்தில் நமது சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நினைவாக்கவும் இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றவும் 5 உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வோம் என்றார்.அவை பின்வருமாறு ,1. வளர்ச்சி பெற்ற இந்தியாவை உருவாக்குவோம்.
2. அடிமை மனப்பான்மையை அகற்றுவோம். 3. நமது பாரம்பரியத்தில் பெருமை கொள்வோம். 4. ஒற்றுமை உணர்வுடன் இருப்போம். 5.குடிமக்கள் தங்களது கடமைகளை நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டும். பிரதமர் மற்றும் முதல்-மந்திரிகளும் இந்த உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்தியாவை வளர்ச்சி பெற்ற நாடுகள் பட்டியலில் சேர்க்க அடுத்த 25 ஆண்டுகள் இளைஞர்கள் ஓய்வின்றி பாடுபட வேண்டும். இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைத்து தற்சார்பு நாடாக இந்தியாவை உயர்த்த வேண்டும்.நாடு உறுதி எடுத்துக்கொண்டு ஒன்றாக செயல்படும்போது தனது இலக்குகளை பூர்த்தி செய்ய முடியும் என்பதை நமது அனுபவம் உணர்த்துகிறது என்று கூறினார்.
அவர் கூறிய உறுதியை எடுத்துக்கொண்டு அனைவரும் சேர்ந்து நமது இந்தியாவை வளர்ச்சி நாடாக மாற்றி அமைக்க வேண்டும்.இந்த செய்தி சமூக ஊடகங்களில் அதிகளவு பரவி வருகிறது.