அந்தத் தேர்வு நிச்சயம் நடக்கும்! பள்ளி கல்வித்துறை அமைச்சர் அதிரடி!

0
78

+1 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படாது எப்போதும் போல நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பிளஸ் 1 பொதுத் தேர்வு மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் இல்லாததன் காரணமாக, அந்த தேர்வை ரத்து செய்து விடலாம் என அண்மையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்தார்கள்.

இதற்கு அரசு தரப்பிலும், ஆசிரியர்கள் இடையிலும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தனர். இதனைத் தொடர்ந்து பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படாது வழக்கம் போல தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருக்கின்ற பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் பங்கேற்றுக் கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

அதன் பிறகு அவர் தெரிவித்ததாவது, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படாது. வழக்கம் போல நடக்கும் தமிழக அரசு பள்ளிகளின் கட்டிடங்களை சீரமைக்கும் பணிகள் மிக விரைவில் ஆரம்பமாகும் என்று தெரிவித்தார்.

சாரண, சாரணியர், இயக்க ஆணையர் இளங்கோவன், பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.