பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்! மறு பிரேத பரிசோதனை ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வு முடிவு நாளை வெளியீடு!
சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் கடந்த மாதம் 13ம் தேதி பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அதனை கண்டித்து கடந்த மாதம் 17ஆம் தேதி சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்பு மாணவியின் உறவினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மாணவ, மாணவியர் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த போராட்டம்மானது மாலை நேரத்தில் வன்முறையாக வெடித்தது.
மேலும் அப்பள்ளியில் இருந்த பேருந்துகள் இதர வாகனங்கள் மற்றும் சான்றிதழ்கள் அனைத்தும் தீ வைத்து கொளுத்தப்பட்ட நிலையில் பள்ளி வளாகம் சூறையாடப்பட்டது. மேலும் போலீசார்கள் சிலரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் மாணவியின் தந்தை ராமலிங்கம் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும் அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. மேலும் மனுதாரர் தரப்பில் மருத்துவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை ஏற்கப்படவில்லை. இதனை எதிர்த்து மாணவியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும் அந்த மனு ஆனது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.
மேலும் அவரது உடலை பெற்றுக் கொள்ளுமாறு மாணவியின் வீட்டில் கடந்த 19ஆம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினார்கள். மேலும் மாணவி உடலை வாங்க பெற்றோர் முன் வராததால் காவல்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற போவதில்லை என்றும் மாணவியின் மறு பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ ஆகியவை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 மருத்துவர்கள் கொண்ட குழு ஆய்வு செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.
அந்த உத்தரவை அடுத்து மாணவி உடலை பெற்றோர்கள் பெற்றுக் கொண்டு தகனம் செய்தனர்.மேலும் இந்த உத்தரவின் அடிப்படையில் மறு பிரேத பரிசோதனை முடிவுகள் வீடியோ காட்சிகள் ஜிப்மர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மறு பிரேத பரிசோதனை முடிவுகளை ஜிப்பர் மருத்துவமனை குறைவு ஆய்வு செய்தனர் அந்த ஆய்வு ஆனது நிறைவு பெற்றது.
மேலும் இன்று அல்லது நாளை விழுப்புரம் நீதிமன்றத்தில் அந்த ஆய்வு முடிவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஜிப்மர் மருத்துவ குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தின் முக்கிய ஆதாரமாக மறு பிரேத பரிசோதனை முடிவு இருக்கும் எனவும் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.