சேலம் மாவட்டத்தில் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி பேருந்தில் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை! போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்!
சேலம் மாவட்ட ஆத்தூர் அடுத்த தலைவாசல் தாலுக்கா லத்துவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காசி. இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுதா .இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் வேதாசனி. இவர் வீரகனூரில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வேதாசனின் தாய் சுதா மகள் வேதாசினியை பள்ளிக்குச் செல்லும் பள்ளி பேருந்தில் ஏற்றி விடுவதற்காக சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த அவரது ஒன்றை வயது இளைய மகள் பவனிகா ஸ்ரீ தாயின் பின்னால் வந்துள்ளார் .அதனை அவரது தாய் சுதா கவனிக்கவில்லை. மேலும் பள்ளி பேருந்தை டிரைவர் எடுத்து உடன் கீழே நின்று கொண்டிருந்த பவனிகா ஸ்ரீ மீது பள்ளி பேருந்து சக்கரம் ஏறியது. அதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பவனிகா ஸ்உயிரிழந்தார்.
மேலும் அப்பகுதி மக்கள் பள்ளி பேருந்தை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வீரகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரனூர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனத்தை இயக்கும் டிரைவர்கள் கவனக்குறைவால் உயிர் சேதம் ஏற்பட்டதை கண்டித்து பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உடல் நசுங்கி உயரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.