பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிவிப்பு!தொடர்ந்து மூன்று நாட்கள் நடைப்பயணம்!. தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
தருமபுரி மாவட்டம் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைப்பயண பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,தருமபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவிரி ஆறும், வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறும் பாய்கிறது.
ஆற்று நீர் பாய்ந்த போதிலும் அந்த மாவட்டத்தில் பாசனத்திற்கும் நீரில்லாமல் விவசாயிகள் அவஸ்தி படுகிறார்கள். இந்நிலையில் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு குடிக்கவும் நீரில்லாமல் போயின. அறிவியலும்,தொழில்நுட்பமும் வளர்ந்தும் கூட நூற்றாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த சிக்கலுக்கு இப்போது வரை முழு தீர்வு காணப்படவில்லை.
இதுதான் காலம் காலமாக நம்மை வேதனை அளிக்க செய்கின்ற ஒரு உண்மை. காவிரி உபரி நீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்,தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் செழிக்கும்,வேலை வாய்ப்பு பெருகும், என அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் அனைவரின் முன்னிலையிலும் உறுதியளிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அவை நிறைவேற்றப்படவில்லை. இன்றைய திமுக ஆட்சியில் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்த போதும் இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளேன். ஆனாலும் தமிழக அரசிடம் இருந்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.
இச்செயல் எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளிக்கின்றது. இந்தத் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தி ஒகேனக்கல்லில் வெள்ளிக்கிழமை காலை முதல் மூன்று நாட்களுக்கு நடைப்பயண பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன்.
இந்த சூழ்நிலையில் ஆவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற எண்ணத்தில் இதனை செய்கின்றேன். பென்னாகரம், இண்டூர், நல்லம்பள்ளி, இலக்கியம்பட்டி,தருமபுரி,சோலைக்கொட்டாய்,கடத்தூர்,கம்பைநல்லூர், மொரப்பூர்,அரூர்,பாப்பிரெட்டிப்பட்டி, வழியாக வரும் ஞாயிற்று கிழமை
ஆகஸ்ட் 21 ஆம் தேதி மாலை பொம்மிடியில் நடைபயணத்தை நிறைவு செய்ய விரும்புகிறேன் என அந்த அறிவிப்பில் கூறியிருந்தார்.அவர் கூறியதை தொடர்ந்து பல்வேறு கட்சியினருக்கிடையே சலசலப்பு பேச்சுக்கள் ஏற்பட்டது.மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.