முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! அனைவருக்கும் உதவித்தொகை வழங்கும் திட்டம்!   

0
162
A new announcement by the minister! You can pay like this!
A new announcement by the minister! You can pay like this!

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! அனைவருக்கும் உதவித்தொகை வழங்கும் திட்டம்!

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டம் தொடந்து  நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் ரங்கசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுவுள்ளார். அதில் 100 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.7,000 உதவித்தொகை வழங்கப்படும். 90 முதல் 100 வயது வரை உள்ளவர்களுக்கு உதவித்தொகை ரூ.3,500ல் இருந்து ரூ.4000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மேலும் 15,000 முதியோர்கள் மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கு அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும். மீன் பிடிக்கும் போது விபத்தில் உயிரிழக்கும் மீனவர்கள் குடும்பத்திற்கு உதவித்தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

இதைதொடர்ந்து புதுச்சேரியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கி  வீடு கட்டி தரப்படும். புதுச்சேரியில் மாணவிகளுக்கு தாய் வழியில் சாதி சான்றிதழ் வழங்க ஆய்வு செய்யப்படும். மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி  தந்தை வழியில் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. தந்தை வழியில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு உள்ளது. கேரளாவை போல புதுச்சேரியிலும் தாய் வழியில் சாதி சான்றிதழ் வழங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்படும் என்று தெரிவித்தார்.

Previous articleஇல்லத்தரசிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!..கேஸ் சிலிண்டர் விலை குறைவு!!
Next articleஅரசுப் பேருந்தில் தவறி விழுந்த மாணவன் பலி! போக்குவரத்துக் காவல்துறையினர் விசாரணை!