இறுதி தீர்ப்பிற்கு காத்திருக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்!..வெல்லப்போவது யார்?
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்ந்து சில கால மாதமாக நீடித்து வருகிறது.இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே பல மோதல்கள் வெடித்தது. இந்த மோதல் காரணமாக ஒருவரை ஒருவர் மாறி மாறி ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்து வருகின்றார்கள்.
இந்நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி அதை மேல் முறையீடு செய்தார்.
இந்த சூழ்நிலையில் வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 மணியளவில் நீதிபதிகள் வழங்க இருப்பதாக தெரிகிறது.இதனால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் பரப்பரப்பில் இருகின்றனர்.மேலும் தீர்ப்பு வரும் வேளையில் சென்னை ராணிபேட்டை அதிமுக அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.
இரு தரப்பும் சென்ற கூட்டம் போலவே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு கலவரத்தில் ஈடு படுவார்களோ என எண்ணியும்,அதே போல் இந்த இறுதி தீர்ப்பிலும் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுப்பதற்காக உதவி ஆணையர் தலைமையில் 80 கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் காவல் துறையினர் அப்பகுதிகளை சுற்றி ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.இதனால் அதிமுக தொண்டர்களுக்கிடையே பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தி வருகிறது.