அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரம்! பன்னீர் செல்வத்திற்கு விரைவில் சம்மன் சிபிசிஐடி காவல்துறை அதிரடி!

0
141

கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் அலுவலகத்திற்குள் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் நுழைந்து கலவரம் செய்து அங்கிருந்த பல முக்கிய ஆவணங்களை திருடி சென்றதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் வழங்கப்பட்டது.

தற்போது அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விசாரணையை தொடங்கியிருக்கின்ற சிபிசிஐடி காவல்துறையினர் பன்னீர்செல்வத்திற்கு சமன் அனுப்ப முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறையினரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு கீழ் ஆய்வாளர்கள் லதா, ரம்யா, ரேணுகா, உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த குழுவை சார்ந்தவர்கள் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு மிக விரைவில் சமன் அனுப்புவதற்கு இந்த குழு முடிவு செய்திருக்கிறது.