புதுமைப்பெண் திட்டம் நிச்சயம் பெண்களுக்கு கை கொடுக்குமா? விடியா அரசின் நோக்கம் என்ன?
அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட மூவலூர் ராமாமிர்தா அம்மையார் திட்டத்தை தற்போதைய திமுக அரசு, அதனை மாற்றி அமைத்து பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மேல் படிப்புக்கு உதவும் வகையில் மாதம் ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டமானது இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்தின் மூலம் தற்பொழுது 6 லட்சம் பெண்கள் பயனடைய உள்ளனர் என கூறுகின்றனர்.
ஆனால் பழைய திட்டத்தை காட்டிலும் இத்திட்டம் பெரும்பான்மையாக பெண்களுக்கு கைகொடுக்குமா என்பது சந்தேகத்திற்குரியதே. பழைய திட்டத்தில் தாலிக்கு தங்கம் மற்றும் முதல் பெண் பட்டதாரிகளுக்கு 5௦ ஆயிரம் வரை பணம் போன்றவை வழங்கப்பட்டது.இதனால் பெண்கள் பலர் பயனடைந்தனர். இத்திட்டத்தோடு தற்போது மாற்றியமைத்த திட்டத்தை ஒப்பிடுகையில் பெண்களுக்கு கிடைக்கும் சலுகை சற்று குறைவு தான். பொதுமக்களின் கண்ணைக் கட்டி ஏமாற்றும் போக்கில் தான் இந்த திமுக அரசு இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
அதிமுக அரசின் அம்மாவால் அமல்படுத்தப்பட்ட பல திட்டங்களை முடுக்க வேண்டும் என்பதே திமுக அரசின் தலையாய நோக்கமாக உள்ளது. அந்த வகையில் இத்திட்டத்தை மாற்றியமைத்தது பெரும்பான்மையாக வரவேற்கப்படவில்லை. இத்திட்டத்தை காட்டிலும் அம்மா அரசால் கொண்டுவரப்பட்ட திட்டமானது அனைத்து பெண்களும் பயனடையும் வகையில் அமைந்தது. இப்பொழுது திமுக அரசு கொண்டுவந்த திட்டத்தால் குறிப்பிட்ட சில பெண்கள் மட்டுமே இதனை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஏதுவாக அமைந்துள்ளது.அவ்வாறு பார்க்கும்பொழுது விடியா அரசின் இந்த திட்டமானது கட்டாயம் பெண்களுக்கு உதவும் வகையில் அமையாது.