கரிசலாங்கண்ணி சாப்பிட்டால் இவ்வளவு பயன்களா?
மிக உன்னதமான மூலிகைகளில் ஒன்று (வெள்ளை) கரிசலாங்கண்ணி.
வள்ளலார் சொன்ன ஐந்து முக்கிய காயகல்ப மூலிகைகளில் இது முதன்மையானது.
1.கரிசலாங்கண்ணி பல் துலக்க உதவும் சிறந்த மூலிகை. பல் துலக்கும் போதே கோழை வெளியேறும்.
இதை கோழை நீக்க பிரத்தியேகமாக பயன்படுத்துவோரும் உள்ளனர்.
2. தினசரி நான்கு கரிசலாங்கண்ணி இலைகள் சாப்பிட, உடலின் இராஜ உறுப்புகளான கல்லீரலும் மண்ணீரலும் பலப்படும். அதனால், மஞ்சள் காமாலை மற்றும் நீரழிவு உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்கும்.ஏற்கனவே இருந்தாலும் இந்நோய்களை குணப்படுத்தும்.
3.கரிசலாங்கண்ணியை தேங்காய் எண்ணையில் காய்ச்சி பயன்படுத்த தலைமுடி உதிர்வது நிற்கும், முடி நன்கு கருமையாக வளரும்.