வீட்டுமேல் உள்ள சிமெண்ட் அட்டை உடைந்து இருந்தால் அதை எப்படி சரி செய்வது!

0
104

நான் கிராமங்களில் அனைத்து மக்களும் சிமெண்ட் அட்டையை பயன்படுத்தி வருகின்றோம். வெயில் காலத்திலேயே அல்லது அருகில் உள்ள மரத்திலிருந்து தேங்காயோ அல்லது வேறு ஏதாவது கல்லும் விழுந்து அது உடைந்து போய் கிடக்கும்.

 

வெயில் அடித்தாலும் அதனால் பிரச்சனை ஏற்படும். மழை வந்தாலும் அதன் மூலம் பிரச்சனை தான், மழை வந்தால் வீட்டின் உள்ளே தண்ணீர் புகுந்து பிரச்சனை ஆகும். இந்தப் பிரச்சினையால் மிகவும் பாதித்துள்ளீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான்.

 

1. முதலில் சிமெண்ட் அட்டை உடைந்திருக்கும் பகுதியில் நன்றாக தூசி இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளவும்.

2. ஒரு செல்லோ டேப்பை எடுத்து எவ்வளவு தூரம் உடைந்து இருக்கின்றதோ அவ்வளவு தூரம் அட்டையின் கீழ் புறம் ஒட்டிக்கொள்ளவும்.

3. பின் மேலே சென்று மறுபடியும் எந்த ஒரு தூசும் இல்லாத அளவிற்கு சுத்தம் செய்து கொள்ளவும்.

4. இப்பொழுது ஒரு பாட்டிலில் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளுங்கள்.

5. இப்பொழுது ஒரு பெரிய பவுல் அல்லது பிளாஸ்டிக் பாக்ஸை எடுத்துக் கொள்ளவும்.

7. அதில் பெட்ரோலை ஊற்றிக் கொள்ளவும்.

8.இப்பொழுது எவ்வளவு பிளவு இருக்கிறதோ அவ்வளவு பிளவுக்கு ஏற்றவாறு தெர்மோகோல்களை எடுத்துக் கொள்ளவும்.

9. அந்த தெர்மாகோல்களை பெட்ரோலில் முக்கி கொள்ளவும்.

10.பெட்ரோலில் தெர்மாகோள்கள் உருகி பசை பதத்திற்கு வந்து விடும்.

11. இப்பொழுது அந்த பசையை எடுத்து பிளவு உள்ள பகுதிகளில் பூசவும்.

12. அரை மணி நேரம் கழித்து அந்தப் பகுதியை பார்த்தால் குமிழ் போன்ற பபுள்ஸ் இருக்கும்.

13. பின் மறுபடியும் அந்த பசை நிரப்பிய பகுதியின் மேலே மறுபடியும் இரண்டாவது முறை பெட்ரோல் பசையை பூசவும்.

14.ஒரு நாள் அப்படியே வெயிலில் காயவைத்து அதை நீங்கள் பார்த்தால், உங்களுக்கே ஆச்சரியப்படும் அளவிற்கு அந்த இடம் நீங்கள் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் தண்ணீர் கசியாத அளவிற்கு நிற்கும். பயன்படுத்தி பயன் பெறுங்கள்.