முட்டைகோஸ் மசாலா கூட்டு! ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்!

0
116

முட்டைகோஸ் மசாலா கூட்டு! ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்!

தேவையான பொருட்கள் : பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் இரண்டு கப் , பொடியாக நறுக்கிய வெங்காயம் இரண்டு கப், பாசிப்பருப்பு கால் கப், பட்டை ஒரு துண்டு, கிராம்பு இரண்டு, ஏலக்காய் ஒன்று, தேங்காய்த் துருவல் ஒரு கப் , காய்ந்த மிளகாய் நான்கு, கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி அளவு.

தாளிக்க : எண்ணெய் தேவையான அளவு, கடுகு, உளுந்து ஒரு டீஸ்பூன் , சீரகம் ஒரு டீஸ்பூன் , கறிவேப்பிலை ஒரு கொத்து, உப்பு தேவையான அளவு.

செய்முறை : ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.அதில் பாசிப்பருப்பைப் போட்டு வேகவைக்க வேண்டும். முக்கால் பதம் வெந்ததும், அதில் நறுக்கி வைத்துள்ள முட்டைகோஸை போட வேண்டும்.

இரண்டும் சேர்ந்து வெந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய் இவைகளை வறுத்து தேங்காய் சேர்த்து அரைத்து வெந்த கலவையில் கொட்ட வேண்டும். பின்னர் உப்பு போட்டு கொதிக்க வைத்து கடுகு, சீரகம் தாளித்து கொட்ட வேண்டும். அடுப்பிலிருந்து இறக்கி கொத்துமல்லித்தழைத் தூவி பரிமாறலாம்.

 

author avatar
Parthipan K