இப்பொழுது எந்த பொருள் வாங்கினாலும் மயோனைஸ் போடுகிறார்கள். மயோனைஸ் என்பது நாம் சாப்பிடும் சிக்கன், சிக்கன் பிரை ஆகட்டும், பர்கர் அல்லது சாண்ட்விச், பீட்ஸா, என அனைத்திலும் மயோனைஸ் இல்லாமல் உணவு ருசிக்கவே ருசிக்காது என்ற அளவிற்கு வந்துவிட்டது.
கடைகளில் விற்கும் மயோனைஸ் 100 ரூபாய் 200 ரூபாய் என்று கடைகளில் வாங்கி ஏமாறாமல் வீட்டிலேயே இரண்டே நிமிடத்தில் மயோனைஸ் தயாரிக்கலாம் எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
1. முட்டை 2
2. மிளகு 1 ஸ்பூன்
3. பூண்டு 4 பல்
4. வாசனை இல்லாத எண்ணெய் தேவையான அளவு
5. உப்பு
6. சர்க்கரை
செய்முறை:
1. முதலில் ஒரு மிக்ஸியை எடுத்துக் கொள்ளவும்.
2. அதில் இரண்டு முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ளவும், முட்டையின் மஞ்சள் கரு வேண்டாம் என்றால் நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டாம். முட்டையின் வெள்ளை பகுதியை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
3. பின் ஒரு ஸ்பூன் அளவிற்கு மிளகு சேர்த்துக் கொள்ளுங்கள்.
4. பின் நான்கு பல் பூண்டை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள்.
5. தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
6. ஒரு ஸ்பூன் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள். சர்க்கரை வேண்டாம் என்று நினைப்பவர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.
7. இப்பொழுது மிக்சியை மூடி low speed to high speed வரை சென்று அரைத்துக் கொள்ளுங்கள்.
8. பின் மூடியை திறந்து, இப்பொழுது கால் கப் அளவிற்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.
9. மறுபடியும் நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
10. மறுபடியும் கால் கப் அளவிற்கு எண்ணெயை ஊற்றி மறுபடியும் அரைத்துக் கொள்ளுங்கள்.
11. இப்பொழுது சுவையான மயோனைஸ் வீட்டிலேயே ரெடி.