7 நாள் இந்த பாலை குடிங்க!உடல் சோர்வு, இரத்த பற்றாக்குறை நீங்கும்!

0
190

ஏழு நாள் தொடர்ந்து இந்தப் பாலை குடித்து வரும் பொழுது கண் பார்வை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும். அது மட்டும் இன்றி இடுப்பு வலியால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இந்த பால் ஒரு நிவர்த்தியாக இருக்கும். அதே போல் நாள் முழுக்க வேலை செய்யும் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி இது ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும். உடல் தெம்பு தரும்.

 

தேவையான பொருட்கள்:

 

1. உலர் பேரிச்சை பழம்

2. பாதாம் பருப்பு 10

3. பட்டை

4. மஞ்சள் தூள்

5. பால்

 

செய்முறை:

 

1. முதலில் உலர்ந்த திராட்சை பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

2. ஒரு பாத்திரத்தில் அதை போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

3. பின் ஊற வைத்ததை கொட்டைகளை நீக்கி அரைத்து கொள்ளுங்கள்.

4. பின் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் இரண்டு டம்ளர் பாலை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

5. கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளவும்.

6. ஒரு துண்டு பட்டையை சேர்த்துக் கொள்ளவும்.

7. பத்து பாதாம் பருப்புகளை எடுத்து தூள் தூளாக நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

8. பின் அரைத்து வைத்த பேரிச்சப் பழத்தை போட்டுக் கொள்ளவும்.

9. பாலை நன்கு காய வைக்கவும்.

10. நீங்கள் சர்க்கரை என எதையும் சேர்க்க வேண்டாம். பேரிச்சம் பழத்தில் உள்ள சுவையே போதும்.

 

 

இதை உங்கள் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வரும் பொழுது உங்களுக்கு உடல் தெம்பு பெரும். உடல் சோர்வு இருக்காது. கண் மங்குதல், கண் எரிச்சல் என எதுவும் இருக்காது. இரவு படுக்கப் போகும் முன் இதனை ஒரு டம்ளர் குடித்து வரவும்.

 

Previous articleஇனி வீட்டிலேயே 1 நிமிடத்தில் மயோனைஸ் செய்யலாம்! 100,200 என கடைகளில் வாங்க வேண்டாம்!
Next articleவெங்காயத்தை கால் பாதங்களில் வைத்து கட்டுவதால் இத்தனை நன்மைகளா! உடனே ட்ரை பண்ணுங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here