டின்பிஎஸ்சியில்  பதவி உயர்வு குறித்து தமிழக அரசின் கோரிக்கை! உச்சநீதிமன்றத்தின் உத்தரவு!

0
203
Tamil Nadu government's request for promotion in DinPSC! The order of the Supreme Court!
Tamil Nadu government's request for promotion in DinPSC! The order of the Supreme Court!

டின்பிஎஸ்சியில்  பதவி உயர்வு குறித்து தமிழக அரசின் கோரிக்கை! உச்சநீதிமன்றத்தின் உத்தரவு!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசு பணிகளில் மதிப்பெண் அடிப்படை. மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில்  அவமதிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டது. டிஎன்பிஎஸ்சியில் மதிப்பெண் ,சீனியார்ட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற வழக்கின் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்ன.அதனை அமல் படுத்தினால் ஏற்படும் சிக்கல் என்ன என்பதன் தொடர்பாக விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் சி.டி.ரவிக்குமார் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அதில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் டிஎன்பிஎஸ்சியில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி மதிப்பெண் ,சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வரையறை செய்யப்பட்டு வருகிறது.

அதனால் எங்களுக்கு கூடுதலாக நான்கு வாரங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என கூறினார். தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி பதவி உயர்வு வழங்கும் விவகாரத்தில் கால அவகாசம் வழங்க கோரிக்கை விடுத்த நிலையில் .அந்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் தீபாவளி விடுமுறைக்கு பிறகு இந்த விசாரணை தொடங்கும் என இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளது.

Previous articleமுகத்தில் அதிக படியாக வரக்கூடிய வியர்வையை தடுக்க உதவும் மருத்துவம்
Next articleமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எட்டு பேர் மீது வழக்கு பதிவு!