பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை:! 4150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

Photo of author

By Pavithra

பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை:! 4150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அக்டோபர் 4 மற்றும் 5 தேதிகளில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடவிற்கும் நிலையில் செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதி சென்னையிலிருந்து சுமார் 4150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.மேலும் பள்ளி மாணவர்களுக்கு வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி காலாண்டு தேர்வு முடியவிருக்கும் நிலையில்,தேர்வு விடுமுறையோடு பண்டிகை விடுமுறையும் சேர்த்து விடுவதாக அரசு அறிவித்துள்ளது.அதாவது 1-5 வகுப்பு வரை அக்டோபர் 1 முதல் 9-ம் தேதி வரையிலும்,6-12- ஆம் வகுப்பு வரை அக்டோபர் 1-5ஆம் தேதி வரையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.