குறைந்த விலையில் 4ஜி லேப்டாப்: அசத்தும் ஜியோ!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏற்கனவே குறைந்த விலையில் 4ஜி ஜியோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது. அவ்வரிசையில் ரூ.15,000 விலையில் ஜியோ ஓஎஸ் வசதியுடன் பிரத்தியேக லேப்டாப்பை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ புக்கிற்காக உலகளாவிய நிறுவனங்கள் ஆன குவால்காம் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கொண்டுள்ளது.
ஜியோ லேப்டாப் இந்த மாதம் முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசுத்துறை நிறுவனங்களுக்கு முதற்கட்டமாக விற்பனை செய்யப்பட உள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஜியோ 5ஜி போனும் கூடிய விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஜியோபுக் உள்நாட்டில் Flex ஒப்பந்த உற்பத்தியாளர் மூலம் தயாரிக்கப்படவுள்ளது. ஆராய்ச்சி நிறுவனம் ஐடிசி தரவுகளின் படி, இந்தியாவில் ஒட்டுமொத்த கம்ப்யூட்டர் ஏற்றுமதி கடந்த ஆண்டு 14.8 மில்லியன் யூனிட்களாக உள்ளது. தற்போது ஜியோ லேப்டாப் னது 4ஜி சிம் கார்டு வசதியுடன் அறிமுகப்படுத்திள்ளது. மேலும் இந்த லேப்டாப் பிரத்தியேக ஜியோ ஓஎஸ்-இல் இயங்கப்படுகிறது.