இன்றும் போராட்டம் தொடரும்:! கோவையில் பரபரப்பு!!

0
67

இன்றும் போராட்டம் தொடரும்:! கோவையில் பரபரப்பு!!

கோவையில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய மற்றும் அரசாணைப்படி கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட 250 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.இதனால் 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சார்பில், தூய்மை பணியாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.ஆனால் கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களை விடுவிக்காமல் பேச்சுவார்த்தைக்கு வர மாட்டோம் என்று பணியாளர்கள் மறுத்து விட்டனர்.

இதனால் கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் விடுவித்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் 18 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து விவாதிக்கப்பட்டது.விவாதிக்கப்பட்ட 18 அம்ச கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்படுவதாக பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் தூய்மை பணியாளர்களோ எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்க வேண்டுமென்று தூய்மை பணியாளர்களின் சங்கம் மற்றும் பணியாளர்களின் சார்பில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பிற அலுவலர்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி இதற்கான முடிவை தெரிவிக்கப்படும் என்று அரசு கூறியது.ஆனால் எழுத்துப்பூர்வமாக அரசு தெரிவிக்கும் வரை இந்தப் போராட்டம் இன்றும் தொடரும் என்றும் தூய்மை பணியாளர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.

author avatar
Pavithra