மீண்டும் விவாத பொருளாகிய மதுரை எய்ம்ஸ்:!! அண்ணாமலையை சாடிய மதுரை எம்பி!!
பிரதமர் மோடி அவர்களால் கடந்த 2017 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிளாஸ்பூரில் அடிக்கல் நாட்டப்பட்டது. 24 ஏக்கரில் 1.470 கோடி செலவில் கட்டப்பட்ட 750 படுக்கை வசதிகள் கொண்ட பிரம்மாண்ட எய்ம்ஸ் மருத்துவமனையை,நாளை முற்பகல் 11:30 மணி அளவில் பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கின்றார்.
இந்த ஆண்டு இறுதியில் இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இந்த மருத்துவமனையின் பணிகள் தீவிரமாக்கப்பட்டு தற்போது நிறைவு பெற்றுள்ளது.இதனை நாளை பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கும் நிலையில் இதனை சுட்டிக்காட்டி மதுரை எம்பி
சு.வெங்கடேசன் அவர்கள் சரமாரி குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜேபி நாட்டாவின் சொந்த தொகுதியான பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு நாளை திறக்கப்பட இருக்கும் நிலையில் மீண்டும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவாத பொருளாக மாறி உள்ளது.
அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு வந்த ஜே.பி நாட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி 95 சதவீதம் நிறைவுற்றதாக கூறியது பெரும் சர்ச்சைகாலாகியது.
2018 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் இன்னும் பொட்டல்காடாக தான் உள்ளது.அந்த பொட்டல் காட்டினை காட்டி 95 சதவிகிதம் என்றால் என்ன? என்று பாடம் வேற நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி மதுரை எம்பி சு.வெங்கடேசன் அவர்கள் ஜேபி நாட்டா சொன்ன 95 சதவீத கட்டிட பணி அவர் எம்எல்ஏவாக இருந்த பிலாஸ்பூரில் தான் உண்மையிலே நடந்துள்ளது. என்பதனை அண்ணாமலை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார்.