மூன்றாவது போட்டியில் கோலிக்கு ஓய்வு… களமிறங்கப் போவது யார்?

0
244

மூன்றாவது போட்டியில் கோலிக்கு ஓய்வு… களமிறங்கப் போவது யார்?

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டி இன்று மாலை நடக்க உள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் டி 20 தொடர் நடந்து வரும் நிலையில் முதல் இரண்டு போட்டிகளையும் இந்திய அணி வென்றுள்ளது. இதனால் இன்று நடக்கும் மூன்றாவது போட்டியில் இளம் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

அதனால் இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது தீபக் ஹூடா ஆகியோரில் ஒருவர் களமிறக்கப்படலாம் என தெரிகிறது. அதே போல பவுலிங்கிலும் முகமது சிராஜுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என தெரிகிறது. சிராஜ் பூம்ராவுக்கு பதிலாக உலகக்கோப்பை டி 20 தொடரில் களமிறங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியா உத்தேச அணி

ரோஹித் சர்மா (சி), ரிஷப் பந்த் (வி.கே), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், முகமது சிராஜ்/உமேஷ் யாதவ்

தென் ஆப்பிரிக்கா அணி

குயின்டன் டி காக் (வி.கீ.), டெம்பா பவுமா (சி), ரீசா ஹென்ட்ரிக்ஸ் / ஹென்ரிச் கிளாசென், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே/தப்ரைஸ் ஷம்சி, லுங்கி இன்கிடி

Previous articleமீண்டும் விவாத பொருளாகிய மதுரை எய்ம்ஸ்:!! அண்ணாமலையை சாடிய மதுரை எம்பி!!
Next articleமீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் வேதாளம்… வணங்கான் படத்தின் மொத்தக் கதையும் மாற்றமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here